பாம்புப்பண்ணையை மிஞ்சும் குடியிருப்புகள்… 15 நாளில் 150 பாம்புகள்.. ஒரே நாளில் 13 பாம்புகள்.. – அலறும் பொதுமக்கள்..!

தொடர் கனமழை பெய்துவருவதால் கடலூரில் குடியிருப்புகளுக்குள் பாம்புகள் அதிகமாக நுழைந்துவருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பாம்புகள் குடியிருப்புக்குள் வருவது தொடர்கதையாகி வருகிறது.

இதனையடுத்து வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளை கடலூரில் உள்ள பாம்பு பிடி ஆர்வலர் செல்லா பாம்பை பிடித்து பாதுகாப்பான இடங்களில் விட்டு வருகிறார். அதன்படி கடந்த 15 தினங்களில் 150க்கும் மேற்பட்ட குடியிருப்புக்குள் புகுந்த பாம்பினை பிடித்து பாதுகாப்பான இடங்களுக்குள் விட்டுள்ளார்.

மேலும் நேற்று ஒரே நாளில் 13 பாம்புகள் குடியிருப்புகளிலிருந்து பிடிக்கப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து பாம்பு பிடி வீரருக்கு தொடர் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

Total
0
Shares
Related Posts