washing machine : இன்றைய கால கட்டத்தில் லைட்… ஃபேன் …வரிசையில் வாஷிங் மெஷினும் கட்டாய பொருட்களில் ஒன்றாக உருவாகி வருகிறது.
சொல்லப்போனால், வாஷிங் மெஷின் இல்லாத வீடுகளே குறைவு.
வாஷிங் மெஷினில் துணி துவைப்பதால் நேரம் மற்றும் பளு குறைகிறது.
இது உண்மை தான்.
ஆனால் பெரும்பான்மையை நேரங்களில் தோன்றக்கூடிய ஒரு கேள்வி, வாஷிங் மெஷினில் துணி சுத்தமாகத் துவைக்கப்படுகிறதா என்பதே.
இதையும் படிங்க : Yorker King நடராஜன்.. தங்க சங்கிலியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்!
வாஷிங் மெஷினகளில் துவக்கப்படும் துணியின் சுத்தத்தின் மதிப்பு பயன்படுத்தப்படும் சலவை பொருட்களைத் தாண்டி, வாஷிங் மெஷினகளின் சுத்தத்தையும் பொறுத்து உள்ளது.
எனவே துணிகளைத் துவைக்க எந்தளவு அவை உதவியாக இருக்கிறதோ ! அதே அளவு அவற்றைச் சுத்தமாகவும் வைக்க வேண்டும்.
நம்மில் எத்தனை பேர் வாஷிங் மெஷினை சுத்தம் செய்கிறோம்.,
நம்மில் பலர் அதில் துணியைத் துவைக்கிறார்களே தவிர, அதை ஒருபோதும் சுத்தம் செய்வதில்லை.
வாஷிங் மெஷினை மாதம் ஒரு முறையாவது சுத்தம் செய்யாவிட்டால், அதிலிருந்து துர்நாற்றம் வர தொடங்கும்.
சுத்தம் செய்யாமல் தொடர்ந்து பயன்படுத்துவதால், இயந்திரமும் சீக்கிரமாக பழுதாக வாய்ப்பு உள்ளது.
இதிலிருந்து விடுபட வாஷிங் மெஷின் க்ளீனர்கள் (washing machine) உதவும் .
துணிகளைத் துவைத்த பிறகு இதனைக் கொண்டு வாஷிங் மெஷின் முழுவதும் சுத்தம் செய்வதால் கிருமிகள், பாக்டீரியாக்கள் போன்றவை தாங்காமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
இவை பல வகைகளில் மார்க்கெட்களில் கிடைக்கிறது.
மேலும் வாஷிங் மெஷின்களில் உருவாகும் படிந்துள்ள கறைகளை போக்குவதற்கு எலுமிச்சை பழச் சாற்றுடன் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவைச் சேர்த்து நன்கு கலந்து,
பின்னர் ஒரு ஸ்கர்ப்பர் உதவியுடன் எங்கெல்லாம் கறைகள் உள்ளதோ அங்கெல்லாம் தேய்த்து ஒரு 10 – 15 நிமிடம் வைத்து விட்டு, பின்னர் தண்ணீரை ஊற்றி நன்கு சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
வாஷிங் மெஷின் ட்ரம் சுத்தமாக இருந்தால் தான் மெஷின் நீண்ட நாள் உழைக்கும்.
இதையும் படிங்க : தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!