தென் கொரியாவில் 181 பேர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் 179 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாங்காக்கில் இருந்து தென் கொரியா சென்ற விமானம், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது . இதையடுத்து விமானி விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்க வேண்டும் என எவ்ளவோ முயன்றும் தயாராக்கிய விமானம் வேகமாக மோதி பெரும் விபத்தில் சிக்கியது.
Also Read : 18 மாதங்களில் 11 பேர் கொடூர கொலை – ஓரினச்சேர்க்கை பிரியன் கைது..!!
விமானம் தரையிறங்கியதும் சட்டென தீப்பிடித்ததால் விமானத்தில் பயணித்த . 175 பயணிகள், 6 விமான பணியாளர்களில் 179 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது . மேலும் இந்த விபத்தில் 2 பேர் மட்டும் உயிர் பிழைத்து காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .
ஏற்கவே ரஷ்யா நோக்கி சென்ற விமானம் ஒன்று கஜகஸ்தான் நாட்டில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.