SP sexually harassment-பெண் SP-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கடந்த 2021-ல் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது எடப்பாடி முதல்வராக இருந்த காலத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பு டிஜிபி என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு,
அந்த பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டவர் ராஜேஸ்தாஸ்.அன்றைய காலகட்டத்தில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்த போது டெல்டா மாவட்டத்திற்கு ஆய்வுக்கு சென்றபோது
அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஸ்தாஸ் சென்றார்.
அப்போது ஆய்வு கூட்டம் முடிந்து ராஜேஸ்தாஸ் திரும்புபோது மரியாதை நிமித்தமாக மாவட்ட எல்லையில் நின்ற ஒரு பெண் எஸ்.பியை தன்னுடைய காரில் ஏற்றி சென்று
அவருக்குபாலியல் தொல்லை கொடுத்ததாகபெண் எஸ்.பி புகார் தெரிவித்து இருந்தார். அதனடிப்படையில் ராஜேஸ்தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: loksabha election | ”ஏவி சாரதி Vs காந்தி மகன்..” அரக்கோணத்தில் திமுக வேட்பாளர் யார்?
இந்த வழக்கு, விழுப்புரத்திலுள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி
கண்ணன் ஆகியோர் பணிடை நீக்கம் செய்யப்பட்டனர்.மேலும் இந்த வழக்கில் ராஜேஷ்தாஸுக்கு இரு பிரிவுகளில் 3 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.20,500 அபராதம்,
செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1756926956359258544?s=20
இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த 9ம் தேதியோடு நிறைவு பெற்றதை அடுத்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா இன்று தீர்ப்பு வழங்கினார்.
அதில், பெண் எஸ்.பி.க்கு பாலியல் (SP sexually harassment) தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு கீழமை நீதிமன்றம் அளித்த 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது.
மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ராஜேஷ் தாஸ்க்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.