தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்

special-buses-for-deepavali-at-6-places
special buses for deepavali at 6 places

தமிழகத்தில் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, கல்வி மற்றும் பணிபுரிவதற்காக சொந்த ஊரில் இருந்து சென்று வெளியூர்களில் தங்கி உள்ளவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் குரோம்பேட்டையில் புதிதாக 17 வழித்தடங்களில் அரசு மாநகரப் பேருந்து போக்குவரத்துகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

special-buses-for-deepavali-at-6-places
special buses for deepavali at 6 places

அதே போல் தீபாவளி முடிந்து சென்னை திரும்பவும் 17000 அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், மக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts