சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி இன்று மற்றும் ஆக.16,17ல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று 470 பேருந்துகளும், ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் 365 பேருந்துகளும் இயக்கம்.
கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூரு, நாகை, ஒசூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று 70 பேருந்துகளும், ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் 65 பேருந்துகளும் இயக்கம்.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
Also Read : ஆளுநர் தேநீர் விருந்து – திமுக கூட்டணி கட்சிகள் கூட்டாக புறக்கணிப்பு..!!
மாதவரத்தில் இருந்து இன்று மற்றும் ஆக. 16, 17 ஆகிய தேதிகளில் 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே பயணிகள் அனைவரும் தங்களது பயணத்தை மகிழிச்சியுடன் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பேருந்துகள் இருக்கும் வழித்தடங்களில் பயணிகளின் வசதிக்கேற்ப போக்குவரத்து ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் TNSTC மொபைல் செயலி மூலமாகவும் பொதுமக்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.