ஆயுத பூஜைக்கு சிறப்பு பேருந்துகள்.. – சென்னையில் 3 பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கம்..!

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் கோயம்பேடு உள்பட 3 பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்

3 பேருந்து நிலையங்களிலிருந்து எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்..

1.தாம்பரம் இரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள்:

தாம்பரம் இரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம்‌, திருவண்ணாமலை,சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர்‌, சிதம்பரம்‌, காட்டுமன்னார்கோயில்‌, புதுச்சேரி மற்றும் கடலூர்‌, ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

special buses for Ayudha Pooja Holidays
special buses for Ayudha Pooja Holidays

2. பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள்:

பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து, வேலூர்‌, ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர்‌, காஞ்சிபுரம்‌, செய்யாறு, ஒசூர்‌, திருத்தணி மற்றும்‌ திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது,

3. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள்:

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர, புதுச்சேரி, கடலூர்‌ ம‌ற்றும் சிதம்பரம்‌ வழியாக மயிலாடுதுறை, தஞ்சாவூர்‌, கும்பகோணம்‌, திருவாரூர்‌, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம்‌, வேளாங்கண்ணி, அரியலூர்‌, ஜெயங்கொண்டம்‌, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர்‌, நாகர்கோவில்‌, கன்னியாகுமரி, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல்‌, விருதுநகர்‌, திருப்பூர்‌, ஈரோடு, ஊட்டி, இராமநாதபுரம்‌, சேலம்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

எனவே, பயணிகள்‌ மேற்கூறிய பேருந்து சேவையை முழுமையாக பயன்படுத்திகொள்ள போக்குவரத்துத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்கண்ட இடங்களுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இணைப்பு பேருந்துகள்‌ மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகம்‌ மூலம்‌ இயக்கப்படும் எனவும், பயணிகள்‌ கண்டிப்பாக முகக்கவசம்‌ அணிந்து பயணம்‌ செய்யவேண்டும் எனவும் போக்குவரத்துத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts