Sperm in ice cream : தெலுங்கானாவில் ஐஸ்கிரீம் வியாபாரி ஒருவர் ஐஸ்கிரீமில் விந்தணுக்களை கலந்து விற்பனை செய்யும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வியாபாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும், சாலையோரம் உணவு விற்போருக்கும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக என்ன நடந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் என்ற மாவட்டத்தில் வியாபாரி ஒருவர் ஃபலூடா ஐஸ்கிரீம் விற்பனை செய்துவந்துள்ளார்.
இதையும் படிங்க : சீனாவில் வாலுடன் பிறந்த அதிசய குழந்தை..!!
இந்நிலையில் அந்த வியாபாரி பலூடா ஐஸ்கிரீமில் தனது சிறுநீர் மற்றும் விந்தணுக்களை கலந்து விற்பனை செய்வதை மறைந்திருந்து பார்த்த ஒரு நபர் அதிர்ச்சியடைந்து அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி முகம் சுளிக்க வைத்தது.
இது குறித்த அந்த வீடியோவில், ஐஸ்கிரீம் வியாபாரி சுய இன்பத்தில் ஈடுபட்டு, அதன் பிறகு தனது விந்தணுக்களை ஃபலூடாவில் கலக்கி விற்பனை செய்யும் காட்சிகள் பதிவாகி உள்ளன Sperm in ice cream.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்ணில் பட்டது. உடனடியாக சம்பத்தப்பட்ட கடைக்கு விரைந்து சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த வியாபாரியிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த வியாபாரி மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும், அவர் எங்கே ஐஸ்கிரீம்களை வாங்கினாரோ அங்கே சென்றும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
அங்கே வைக்கப்பட்டிருந்த பழ சாலட்களை பரிசோதித்த அதிகாரிகள், அது கெட்டுப் போய் இருந்ததால் அவற்றை அப்புறப்படுத்தினர்.
இது குறித்து சாலையோரம் உணவு விற்பனை செய்வோருக்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இதுபோன்ற கடைகளில் உணவுகளை வாங்கும் பொது மக்களும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க : ஐஸ்கிரீமில் விந்தணுவை கலந்து விற்பனை – அதிர்ச்சி வீடியோ!