வதந்திகளை இஷ்டத்திற்கு பரப்பி வருவது வேதனையாக உள்ளது என பிரபல பின்னணி பாடகி சைந்தவி ( saindhavi ) தெரிவித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்,பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது இசையமைப்பதோடு, ஹீரோவாகவும் ஜி.வி.பிரகாஷ் கலக்கி வருகிறார்.இந்த நிலையில்,ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி இடையே சமீபகாலமாக கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது .
இதன்காரணமாக ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி ஆகிய இருவரும் கடந்த மே 13 ஆம் தேதி 11 வருட திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு என்ன காரணம் என பலரும் பலவிதமாக சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டனர்.
இந்நிலையில் வதந்திகளை இஷ்டத்திற்கு பரப்பி வருவது வேதனையாக உள்ளது என பிரபல பின்னணி பாடகி சைந்தவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சைந்தவி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
சமூக வலைதளங்களில் எங்களின் விவாகரத்து குறித்து வெளியான தகவல்கள் வருத்தமளிக்கிறது. எங்கள் தனிப்பட்ட விவகாரத்திற்கு மதிப்பளிக்க வேண்டுகோள் வைத்தும் பல யூடியூப் சேனல்கள் அவர்களுக்கு கிடைத்த தகவல்களை வைத்துக்கொண்டு கட்டுக்கதைகளை உருவாக்குவது மன உளைச்சலைத் தருகிறது.
எங்கள் விவாகரத்துக்கு யாரும் காரணம் இல்லை, எங்களின் நலனுக்காக இருவரும் சேர்ந்து எடுத்த ( saindhavi ) முடிவு இது. பள்ளி காலத்தில் இருந்தே ஜி.வியும் நானும் கடந்த 24 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம், இனியும் அந்த நட்பைத் தொடர்வோம் என சைந்தவி தெரிவித்துள்ளார்.