உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற ‘ஸ்க்விட் கேம்’ வெப் சீரிஸ் சிறந்த தொலைக்காட்சி தொடர் உட்பட 14 ‘எம்மி’ விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கு, டிவி நிகழ்ச்சிகளின் ஆஸ்கார் என்றழைக்கப்படும் ‘எம்மி விருது’ வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான எம்மி விருதுகளின் பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில், கொரிய இயக்குநர் ஹ்வாங் டாங்-ஹியூக் இயக்கத்தில் நெட் ஃப்ளிஸில் ஒளிப்பரப்பான ‘ஸ்க்விட் கேம்’தொடர் சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர், இயக்கம் உள்ளிட்ட 14 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.