தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு, கடந்த 21-ந்தேதி மதுரையில் நடைபெற்றது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

குறிப்பாக, பெண்கள் பாதுகாப்புக் குறித்து பேசிய விஜய், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அங்கிள் என விமரிசித்திருந்தார். இவரை அப்பா என மக்கள் அழைத்து வந்த நிலையில், அங்கிள் என குறிப்பிட்டது சர்ச்சையாக மாறியுள்ளது.
திமுக தலைவர்கள் முதல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரை இது குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர். இது அரசியல் மற்றும் மேடை நாகரிகமற்ற செயல் எனவும் தெரிவித்து வருகின்றனர்.
“அணில்கள் ஏன் அங்கிள் அங்கிள் என்று கத்துகிறது ஜங்கிள் ஜங்கிள் என்று தானே கத்தவேண்டும்” என சமீபத்தில் சீமான் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், இது குறித்து கே.எஸ்.ரவிகுமாரிடம் பத்திரிகையாளர் சத்திப்பில் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் ” நான் முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு நிறைய முறை சென்று இருக்கிறேன். நானே வணக்கம் அங்கிள்.. வணக்கம் ஆண்ட்டி.. எப்படி இருக்கீங்க என்று தான் சொல்வேன். அங்கிள் என்பது தவறான வார்த்தை கிடையாது. விஜய் பேசியது எனக்கு தவறாக படவில்லை” என கூறியுள்ளார்.
மேலும், கே.எஸ் ரவிகுமாரின் வயது 67 மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் வயது 71 என்பது குறிப்பிடத்தக்கது.