ITamilTv

அயலான் பொங்கல் : அயலான் படத்தின் ட்ரைலர் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டது படக்குழு..!!

Spread the love

இம்மாதம் பொங்கலுக்கு கோலாகலமாக வெளியாக இருக்கும் அயலான் படத்தின் ட்ரைலர் குறித்த சிறப்பான தரமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது .

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் அயலான் . தமிழர்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது .

KJR நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இவர்களுடன் யோகி பாபு , கருணாகரன் , பால சரவணன் ,பானுபிரியா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க : https://itamiltv.com/mkstalin-pride-about-tamilnadu-freedom-fighters/

இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் PRE RELEASE நிகழ்ச்சி பிரம்மாண்டமாக.இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது ட்ரைலர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அயலான்’ படத்தின் ட்ரெய்லர், நாளை மறுநாள் (ஜனவரி 05) அன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


Spread the love
Exit mobile version