Strange Incident : விடிய விடிய மீன்களின் லீலை.. தூக்கத்தை தொலைத்த மக்கள்!

Strange Incident
Strange Incident
Spread the love

அமெரிக்காவில் குளிர் காலத்தில் திடீரென இரவு நேரங்களில் ஏற்பட்ட வினோத சத்தத்தால் மக்கள் தூக்கத்தைத் தொலைத்து அவதியடைந்துள்ளனர். அப்படி என்ன வினோத சத்தம் (Strange Incident) அது? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..

அமெரிக்காவில் பல மர்ம சம்பவங்கள் பற்றிய செய்திகள் அவ்வப்போது பரவும். அதுபோல தான் இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

இதையும் படிங்க : Consultation Meeting : பா.ஜ.கவிடம் கூலிக்கு மாரடடிக்கும் ஒ.பி.எஸ் – ஜெயகுமார்!!

புளோரிடாவின் தம்பா விரிகுடா பகுதியில் தான் அந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. கடந்த சில காலமாகவே இரவு நேரங்களில் அந்த பகுதியில் ஏதோ ஒரு மர்மமான சத்தம் (Strange Incident) கேட்டுள்ளது.

இரவு நேரங்களில் மட்டும் கேட்கும் இந்த அதிகப்படியான சத்தத்தால் வீட்டின் சுவர்கள் எல்லாம் அதிர்ந்துள்ளது. இதனால் குழந்தைகளால் தூங்கக் கூட முடியாத நிலை ஏற்படுவதாக மக்கள் புகார் அளித்துள்ளனர்.

இது என்ன சத்தம் என்றே பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், ஒரு சிலர் அருகே உள்ள ராணுவ தளத்தில் சீக்ரெட் ஆயுதங்களைச் சோதனை செய்வதால் தான் இந்த சத்தம் வருகிறது எனக் கூறியுள்ளனர்.

இன்னும் சிலர் இரவு நேரங்களில் ஏலியன்கள் சுற்றித் திரிகிறது என்றும், அவை எழுப்பும் சத்தம் தான் இது என்றும் கூறியுள்ளனர். இதனால், அங்கே பதற்றமான சூழல் காணப்பட்டது.

தொடர்ந்து அதே போன்று பல நாட்கள் சத்தம் கேட்டுள்ளது. அது என்ன சத்தம் என்பதை கண்டறிய ஆய்வாளர்களை உள்ளூர் நிர்வாகம் அழைத்துள்ளது.

அதன்படி, அங்கு வந்த ஆய்வாளர்கள் அது என சத்தம் என்பதை கண்டறிந்துள்ளனர்.

அதாவது, இரவு நேரங்களில் அங்குள்ள கடற்கரையில் பிளாக் டிரம் என்ற வகை மீன்கள் தான் இந்த குழப்பமான சத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இனச்சேர்க்கை நேரங்களில் மீன்கள் இது போன்ற சத்தத்தைக் கிளப்புவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து இன்றிரவு முதல் கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் புறப்படும்!

இதை உறுதி செய்வதற்காக அப்பகுதியில் மைக்குகளை நிறுவியுள்ளனர் ஆய்வாளர்கள்.

வட அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை, மேற்கு வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் காணப்படும் இந்த பிளாக் டிரம் வகை மீன்கள்,

பொதுவாகக் குளிர்காலத்தில் தான் இனச்சேர்க்கையில் ஈடுபடும். அப்போது ஏற்படும் இந்த சத்தம் 165 டெசிபல் வரை இருக்கும்.

இவை பொதுவாக 2-14 கிலோ வரை வளரும். கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும். இதன் பற்கள் வட்டமாக இருக்கும். இதன் பற்களால் சிப்பிகளை கூட எளிதாக உடைக்க முடியும்.


Spread the love
Related Posts