கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒரு 24 ஆண்டுகளாக எஞ்சின் ஆயில் குடித்து உயிர் வாழ்ந்து வரும் தகவல் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
கர்நாடகாவின் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த குமார் (40) என்பவர் கடந்த 24 ஆண்டுகளாக பழைய வாகனத்தின் எஞ்சின் ஆயிலை குடித்து உயிர் வாழ்கிறார்.
Also Read : பிரியாணியில் கிடந்த பல்லி – 6 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!
பசிக்காக எஞ்சின் ஆயில் குடிக்கத் தொடங்கிய இவர் தற்போது நாளொன்றுக்கு 5 லிட்டர் வரை எஞ்சின் ஆயிலை குடித்து வருகிறாராம் .
இதுமட்டுமின்றி ஐயப்ப பக்தரான இவர் காகிதங்கள், டீ, காபி ஆகியவற்றையும் உண்டு வருகிறாராம் . இதனால் இவருக்கு உடல் உபாதைகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.