தமிழக மக்கள் குறித்து மிகவும் கீழ்த்தனமாக பேசியுள்ள (tncm obsession) மத்திய பாஜக அமைச்சர் கே. ஷோபாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நிகழ்ந்த பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் தான் காரணம் என மத்திய பாஜக அமைச்சர் கே. ஷோபா பேசியிருப்பது தற்போது தமிழ்நாடு மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .
அந்தவகையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தனது பதிவி குறித்த பொறுப்பை அறியாமல் பொறுப்பற்றத்தனமாக பேசியிருக்கும் மத்திய பாஜக அமைச்சர் சோபா கரந்த்லாஜே அவர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜகவின் இந்த பிளவுபடுத்தும் பேச்சுகளை தமிழர்களும் கன்னடர்களும் உறுதியாக நிராகரிப்பார்கள்.
அமைதி நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய அமைச்சர் சோபா மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Also Read : https://itamiltv.com/vote-polling-in-tamil-nadu-from-7-am-to-6-pm/
பிரதமர் முதல் தொண்டர் வரை பாஜகவில் உள்ள அனைவரும் இந்த கேவலமான பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்!
இந்த வெறுப்பு பேச்சை தேர்தல் ஆணையம் உடனடியாக கவனத்தில் (tncm obsession) கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.