நண்பர்களுடன் சேர்ந்து 10ஆம் வகுப்பு தேர்வு முடிவை பார்க்க சென்ற மாணவர் விபத்தில் பலியான சம்பவம் ( bike accident ) பெரும் பதற்றத்தையும் சோகத்தியும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒட்டுமொத்தமாக 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது,
தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்ற இந்த பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற்றது .
இந்நிலையில் தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து 10ஆம் வகுப்பு தேர்வு முடிவை பார்க்க சென்ற மாணவர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தையும் சோகத்தியும் ஏற்படுத்தி உள்ளது.
மதுரவாயல் பாலத்தின் கீழே லாரி மீது பைக் மோதிய விபத்தில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
நண்பர்களுடன் சேர்ந்து தேர்வு முடிவு பார்க்க பள்ளிக்கு செல்லும் போது இந்த விபத்து நிகழ்ந்ததாகவும்
லாரியை ஒட்டி வந்த டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு தப்பிச் ஓடி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் ( bike accident ) எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.