முதல்வராக இருந்து தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு பணியாற்றக்கூடிய வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவர்களுக்கு இன்று உணவு பரிமாறி காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் .
திட்டத்தை தொடங்கி வைத்த பின் உணவின் தரத்தை பரிசோதித்த முதலமைச்சர், பள்ளிக் குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார். இத்திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 18.50 லட்சம் பேர் பயன்பெறும் நிலையில், தற்போது கூடுதலாக 2.20 லட்சம் பேர் பயன்பெற உள்ளனர்
இந்நிகழ்ச்சியில் உரையாடிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :
காலை உணவுத் திட்டம் மூலம் பெற்றோரின் பொருளாதார சுமையை அரசு குறைத்துள்ளது
இத்திட்டம் அரசுக்கு செலவு இல்லை. எதிர்கால தலைமுறையை உருவாக்கும் முதலீடு
இத்திட்டத்தின் மூலம் 20.73 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் சத்தான உணவை சாப்பிடுகிறார்கள். இனி அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 2.2 லட்சம் மாணவர்கள் காலை உணவுத்திட்டத்தால் பயன்பெறுவர்.
பெற்றோரின் பாசத்தோடு உருவாக்கிய திட்டம் இது; அரசுக்கு எவ்வளவு செலவு ஆனாலும் சரி, மாணவர்கள் பசியுடன் இருக்கக்கூடாது.
முதல்வராக இருந்து தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கு பணியாற்றக்கூடிய வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
காலை உணவு திட்டம் மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது. பள்ளிகளுக்கு வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
Also Read : அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..!!
அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோரை கேட்டுக் கொள்ள விரும்புவது எந்த பள்ளியிலும் வழங்கப்படும் உணவின் விகிதம், தரம் குறைய கூடாது.
காலை உணவு திட்டம் குறித்து அதிகாரிகள் விவாதித்த போது அதை நிதி ஒதுக்கீடு என்று சொல்லாமல் வருங்கால தலைமுறையை உருவாக்குகிற முதலீடு என ஆணித்தரமாக சொல்லுங்கள் என்றேன்.
சங்க இலக்கியங்கள் சொல்வது போல பசிப்பிணி, மருத்துவம் உள்ளிட்டவை போக்கும் பணியை அரசுக்கு பொருந்தும்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் பெண்கள், மாணவர்கள், உள்ளிட்டோரின் முன்னேற்றத்திற்காக, எதிர்காலத்திற்காக முதலமைச்சராக இருந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.