ஃபெஞ்சல் புயலில் மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் சான்றிதழ் கோரி கட்டணமின்றி
விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் சான்றிதழ் கோரி அரசு தேர்வுகள் இயக்கத்தில் கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.
Also Read : அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன் – ஆதவ் அர்ஜூனா
மாவட்ட ஆட்சியரால் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம் மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் விவரங்கள் பெற மாணவர்கள் கல்வி பயிலும் அந்தந்த கல்வி நிறுவனங்களில் விவரதஹி கேட்டு தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.