தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய கோதண்டராமன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் கோதண்டராமன் . ஆரம்ப காலத்தில் மிரட்டும் ஸ்டாண்ட் மேனாக வலம் வந்த இவர் சில படங்களில் குணசித்ர கதாபாத்திங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
Also Read : உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் – ஒரே நாளில் வெளியாகும் 4 திரைப்படங்கள்..!!
அந்தவகையில் சந்தானம் , சிவா , விமல் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கலகலப்பு படத்தில் இவர் நடித்த காமெடி கதாபாத்திரம் பட்டிதொட்டி எங்கும் பெரிதளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் 65 வயதாகும் கோதண்டராமன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று உயிரிழந்துள்ளார்.
கோதண்டராமனின் மறைவுக்கு தற்போது திரையுலகை சேந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.