ராகுல் காந்திக்கு புதிய Passport ..ரவுண்ட் கட்டிய சுப்பிரமணியன் சுவாமி!!

பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் வழங்குவதற்கு நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடியை விமர்சித்தாக கூறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது.

இந்த நிலையில்,எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினருக்கான பிரத்யேக பாஸ்போர்ட்டை அவர் ஒப்படைத்தார்.

இந்நிலையில், டெல்லி ரோஸ் அவன்யூவில் புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு தடையில்லா சான்று கோரி நீதிமன்றத்தில் ராகுல் காந்தி முறையிட்டார்.இது விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி ஆஜரானர்.

அப்போது ராகுல் காந்திக்கு புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கு அனுமதி வழங்கினால் தேசிய ஹெரால்டு வழக்கு விசாரணையை பாதிக்கும் என்று கூறினார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு, ஹெரால்டு வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டபோதே ராகுல் காந்தி வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படவில்லை. இதற்கு ராகுல் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து சுப்ரமணிய சுவாமி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

Total
0
Shares
Related Posts