சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வந்த 47வது சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் வெற்றிகரமாக (closed) முடிந்துள்ளது.
47-வது சென்னை புத்தகக் காட்சி – 2024 சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜன.3-ம் தேதி அன்று மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது .
ஜன.3-ம் தேதி முதல் ஜன.21-ம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்த புத்தகக் காட்சியில் சுமார் 1,000 ஸ்டால்கள் இடம்பெற்றிருந்தன .
மேலும் இந்த புத்தகக் காட்சி விடுமுறை நாட்களில் காலை11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என்றும் வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது .
இந்த புத்தகக் காட்சியில் சிறந்த அறிஞர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதும், பபாசி விருதும் வழங்கப்பட்டது .
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தகம் படிக்கும் ஆர்வமுள்ள அனைவரும் இந்த புத்தகக் காட்சிக்கு வந்து அவரவருக்கு பிடித்த புத்தகங்களை வாங்கி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இதுமட்டுமின்றி இந்த புத்தக காட்சியில் சிறைக்கைதிகள் படிப்பதற்காக தங்களது பல புத்தகங்களை தானமாக கொடுக்கவும் வழிவகை செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையில் சென்னை நந்தனத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 47வது புத்தகக் காட்சிக்கு ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது .
சென்னையில் பருகால மாறுதல் காரணமாக கனமழை பெய்து வந்ததால் பொதுமக்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது .
https://x.com/ITamilTVNews/status/1749303128229638290?s=20
வாகனங்களை நிறுத்தும் இடத்திலும், புத்தக காட்சியின் நுழைவாயில் அருகிலும் தண்ணீர் தேங்கி நின்றதால் வாசகர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். சில புத்தக அரங்குகளுக்கு உள்ளேயும் ஆங்காங்கே மழை நீர் கசிந்து கொண்டிருக்கிறது.
Also Read : https://itamiltv.com/ops-request-to-give-public-holiday-in-tamil-nadu/
இந்நிலையில் இத்தனை நாட்கள் சிறப்பாக நடைபெற்று வந்த 47வது சென்னை புத்தகக் காட்சி நேற்றுடன் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

மேலும் இந்த புத்தகக் காட்சிக்கு (closed ) சுமார் 15 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.