மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி நோக்கி சென்ற வந்தே பாரத் ரயிலில்(vande bharat train) திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குர்வை கேதோரா ரயில் நிலையத்தில் இருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்(vande bharat train) ரயில் இன்று காலை டெல்லியை நோக்கி புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில் போபாலில் இருந்து டெல்லி செல்லும் வழியில் ரயிலின் சி-14 பெட்டியில் தீ பிடித்தது.அந்த பெட்டியில் 36 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. தீவிபத்து ஏற்பட்டதை அறிந்ததும் ரயில் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இதனை தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் குர்வை கேதோரா ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயில் வந்தபோது ஒரு பெட்டியில் உள்ள பேட்டரி கோளாறு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் பெட்டியை சரிசெய்து அதிகாலை 5.40 மணிக்கு ரயில் புறப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 1ம் தேதி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.