கொரோனா வைரஸ் தொற்று கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகளில் பரவி பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இதில், லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்ததனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டதோடு, பொருளாதார ரீதியாகவும் கடுமையான நெருக்கடிகளை சந்தித்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகளில் பரவி, பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இதில், லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்ததனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டதோடு, பொருளாதார ரீதியாகவும் கடுமையான நெருக்கடிகளை சந்தித்தனர்.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் இதில் கடுமையான பாதிப்புக்களை சந்தித்தன. இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகளால் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகளால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பினர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ் நாட்டை பொறுத்தவரை கடந்த 24 மணிநேரத்தில் 172 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரத்தில், நேற்று தமிழ்நாட்டில் ஒரு நாளில் 3,796 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 172 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 35,97,118 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 909 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், 99 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாகவும், உயிரிழப்பு எதுவும் இல்லை என சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 52 பேரும், செங்கல்பட்டில் 17, சேலம் 16, கோவை 15 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.