இந்திய மட்டும் அன்றி பல நாடுகளில் பயிரிடப்படும் திராட்சை பழங்களில் பல வகைகள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உட்கொள்ளும் இந்த திராட்சை கருப்பு திராட்சை, பச்சை திராட்சை, சிவப்பு திராட்சை, என வகைப்படுத்தப்படும்.
குறிப்பாக கருப்பு திராட்சை நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சத்துக்கள் அதிகம் கொண்டது. திராட்சையின் சதை மட்டும் அன்றி அதன் விதைகளிலும் புரோ ஆன்தோ சயனிடின் எனும் சத்து அதிகளவில் கிடைக்கிறது.
இதில் குறிப்பாக கருப்பு திராட்சை சர்க்கரை நோயை கட்டுபடுத்துவதோடு இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டது. கருப்பு திராட்சையை தினமும் காலையில் ஒரு கையளவு சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள உள்ள சர்க்கரையின் அளவை கட்டுபடுத்த முடியும்.
புற்றுநோய்களையும் எதிர்த்து போராடுவதோடு கொலஸ்ட்ராலையும் கட்டப்படுத்தும் கருப்பு திராட்சை
மார்பக புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து புற்றுநோய்களையும் எதிர்த்து போராடும் தன்மை கொண்ட கருப்பு திராட்சையின் சதையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் நமது இரத்தத்திலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலையும் படிப்படியாக குறைத்து நமது உடலை சீராக்கும்.
திராட்சையில் ஆர்கானிக் அமிலம் மற்றும் செல்லுலோஸ் போன்றவையும் உள்ளன. மேலும் வைட்டமின் டி, சர்க்கரை, மாவு சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் காணப்படுவதால் மலச்சிக்கலை தடுத்து வயிற்றின் அமைப்பை நல்ல முறையில் வைத்திருக்க உதவுகின்றன.
இது தவிர திராட்சை பழத்தை உட்கொள்வதனால் ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளவர்கள், மூலநோய் உள்ளவர்கள், கண் புரை வளருதல், கருப்பை கோளாறு உள்ளவர்கள், நரம்புக் தளர்ச்சி, ரத்தசோகை உள்ளவர்கள், தலை முடி உதிர்வு, வயிற்று வலி, குடலில் எரிச்சல், சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் உட்கொள்வது சிறந்த பயனளிக்கும்.
மேலும் உலர் திராட்சையில் கால்சியம், இரும்புச் சத்து, நார் சத்து , மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சி, போன்ற பல்வேறு சத்துக்களும் மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன.