Site icon ITamilTv

3வது முறையாக விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்..!!

Sunita Williams

Sunita Williams

Spread the love

ஃப்ளோரிடாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து அட்லஸ் 5 ராக்கெட் மூலம் 3வது முறையாக சுனிதா வில்லியம்ஸ் ( Sunita Williams ) விண்வெளிக்குச் சென்றுள்ளார் .

பிரபல விண்வெளி வீராங்கனை கல்பனா சாவுலாவுக்கு பின் உலகளவில் பிரபலமான பெண் விண்வெளி வீராங்கனையாக வலம் வருபவர் சுனிதா வில்லியம்ஸ்.

அமெரிக்க கப்பல் படை விமானியான சுனிதா வில்லியம்ஸ், கடந்த 2006-ம் ஆண்டில் நாசா மூலம் முதல் முறை தனது விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். அதனை அடுத்து 2012-ம் ஆண்டு இரண்டாவது முறையாக விண்வெளி சென்று திரும்பினார் .

Also Read : எல்லா போர்களும் வெற்றிக்காக நடத்தப்பட்டவை அல்ல – ராதிகா சரத்குமார்..!!

இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து அட்லஸ் 5 ராக்கெட் மூலம் 3வது முறையாக சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குச் சென்றுள்ளார் .

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நேற்று நள்ளிரவில் அட்லஸ் வி ராக்கெட் மூலம் போயிங்-ன் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளி ஆய்வு மையம் புறப்பட்டனர்.

இந்த 3வது விண்வெளி பயணம் ஏற்கனவே ஒரு முறை கடைசி ஒரு சில நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது சுனிதா வில்லியம்ஸ் தனது 3வது விண்வெளிப்பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்

இதையடுத்து 3வது முறையாக விண்வெளிக்குச் சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸிற்கு தற்போது ( Sunita Williams ) பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Spread the love
Exit mobile version