சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு தொடுத்த நிலையில் இந்த விவகாரத்தில் சீமானுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.
இதையடுத்து சிறிது நாட்களில் அந்த புகாரை வாபஸ் பெற்ற அவர் மீண்டும் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சீமான் மீது வழக்குபதிவு செய்தனர் .
நீண்ட நாட்களாக இழுத்து வந்த இந்த வழக்கு தற்போது பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.
Also Read : சொத்துக்காக தந்தைக்கு எமனாக மாறிய பாச மகன் – உதகையில் நடந்த கொடூர சம்பவம்..!!
இந்த சூழலில் சீமான் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் அவர் மீதான வழக்கை 12 வாரங்களுக்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சீமானுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. சீமானின் மேல்முறையீட்டு மனு மீது விஜயலட்சுமி மற்றும் தமிழக அரசு பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சீமானும், நடிகை விஜயலட்சுமியும் பேசி தீர்வு காண 2 மாதம் அவகாசம் வழங்கியும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பும் கலந்து பேசி உடன்பாடு காண அறிவுறுத்தி 12 வாரத்தில் விசாரித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் சீமான் மீதான இந்த பாலியல் வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த வழக்கு எப்போது முடிவுக்கு வரும் என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.