வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘vaadivasal’ படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளதாக ஷாக்கிங் தகவல் வெளியாகி உள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.
யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்பட்ட்டத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா படானி நடித்துள்ளார்.
சுமார் 38 மொழிகளில் உலகம் முழுவதும் உள்ள திரைப்படங்களில் இப்படம் கோலாகலமாக வெளியாக உள்ளது .
இதையடுத்து எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி, வாடிவாசல் என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படம் சூர்யா நடிப்பில் உருவாக உள்ளது .
முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தாமதமாகி வந்தது.
இந்நிலையில், வாடிவாசல் விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக வெற்றிமாறன் அடிக்கடி லண்டன் சென்று வருவதாகவும் விடுதலை – 2 படப்பிடிப்பை முடித்ததும் வாடிவாசல் படப்பிடிப்பை அவர் துவங்குவார் எனவும் கூறப்பட்டது.
இப்படி இருக்கும் சூழலில் நடிகர் சூர்யா வேறு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருவதால் ‘வாடிவாசல்’ படத்தில் இருந்து அவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி சூர்யா இத்திரைப்படத்தில் இருந்து விலகினால் அவருக்கு பதிலாக தனுஷ்நடிப்பார் என்று திரை துறை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
வரலாற்று சிறப்புமிக்க ஆக்சன் படமாக உருவாகி வரும் கங்குவா படத்தில் சூர்யா பல வித்தியாசமான வேடங்களில் நடித்து உள்ளாராம்.
அதற்கேற்றாற் போல் கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் மாஸான கிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு சூர்யாவின் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது .
Also Read : https://itamiltv.com/blood-test-for-saidai-duraisamy-family/
சூர்யாவின் 42-வது படமாக உருவாகும் இந்த படத்தில் ஏரளாமான போர் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்றும் இதற்காக சூர்யா மட்டுமின்றி ஒட்டு மொத்த படக்குழுவும் கடுமையாக உழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீப காலமாக சூர்யா கையில் எடுக்கும் படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வரும் நிலையில் கங்குவா படமும் சூர்யாவின் (vaadivasal) வெற்றி படங்களில் ஒன்றாக இடம் பெறுமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.