தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான சூர்யா மற்றும் ஜோதிகா வெளிநாட்டில் (Abroad) விடுமுறையை கோலாகலமாக கொண்டாடியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது.
தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்த சூர்யா மற்றும் ஜோதிகா. பெற்றோர் சம்மந்தத்துடன் முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.
கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளனர் .
குழந்தைகளுக்கு தாயான பிறகு பல வருடங்கள் எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா தற்போது தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார் .
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா .
காதல் கணவர் சூர்யாவுடன் இணைந்து 2டி எண்டெர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி பல சிறப்பான தரமான படங்களை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் பிசியாக நடித்து வந்த சூர்யா சிறிய விடுமுறை எடுத்துக்கொண்டு தனது காதல் மனைவி ஜோதிகாவுடன் வெளிநாட்டில் ஜாலியாக விடுமுறையை கழித்துள்ளார்.
கொட்டும் பணியில் தங்களது வயதை மறந்து க்யூட்டாக விளையாடும் சூர்யா – ஜோதிகா ஆகியோர் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .
இந்த ஜோடி தங்களது குழந்தைகள் தியா மற்றும் தேவ் ஆகியோருடன் கடந்த ஆண்டு டென்மார்க் நாட்டிற்கு சுற்றுலா சென்று இருக்கின்றனர்.
வெளிநாட்டில் ரசிகர்களின் அன்பு தொல்லை இன்றி சுதந்திரமாக ஊரை சுற்றி வலம் வந்த இவர்கள் அந்த நாட்டிலேயே சில நாட்கள் தங்கி விடுமுறையை என்ஜாய் செய்தனர் .
Also Read : https://itamiltv.com/venkat-prabhu-shared-the-last-pic-taken-with-bhavatharini/
அந்த வகையில் இம்முறை குழந்தைகளை வீட்டிலேயே விட்டுவிட்டு சூர்யா மற்றும் ஜோதிகா மட்டும் (Abroad) பின்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளனர்.
ஆளை உறைய வைக்கும் பணியில் ஜாலியாக என்ஜாய் செய்யும் இந்த தம்பதிகளை பார்க்க எதோ இப்பதான் திருமணம் முடிந்தது போன்றும் இளம் ஜோடி துள்ளி குதிப்பது போன்றும் தெரிகிறது.