உலகில் இருக்கும் அதிபயங்கர தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்த நபரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னையில் கைது செய்துள்ளனர்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர் .
IS தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது .
Also Read : ஊருக்கு உபதேசம் செய்யும் ஆளுநர் இதை செய்வாரா..? – செல்வப்பெருந்தகை கேள்வி
இந்நிலையில், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு மூளை சலவை செய்து ஆள் செத்த நபர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்து வந்த முக்கிய நபர் என்று கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தமிழ்நாடு பிரிவு தலைவன் என கூறப்படும் அல்பாசித் என்றும் மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசலைச் சேர்ந்த இவர் புரசைவாக்கம் ஆம்புலன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .