“ரஜினிய ஏமாத்திட்டு ஓடி வந்தவருதான் அண்ணாமலை” பகீர் தகவல்களை வெளியிட்ட எஸ்.வி.சேகர்..

சூப்பர் ஸ்டார் ரஜினியை ஏமாற்றிவிட்டு ஓடி வந்த அண்ணாமலைக்கு கட்சி தலைவனாக இருக்க தகுதியே கிடையாது என பாஜக பிரமுகரும் , நடிகருமான எஸ்.வி.சேகர் அதிர்ச்சி தரும் தகவல்களை கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் இரு பெரும் கட்சிகளாக உருவெடுத்து நிற்கும் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் இன்று வரை தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றனர் .இந்நிலையில் மூன்றாவது முக்கிய கட்சியாக உருவெடுக்க மத்தியில் ஆளும் பாஜக முயற்சித்து வருகிறது.

அதிமுகவுடன் இரும்புக்கரம் கொண்ட கூட்டணியில் இருக்கும் பாஜவுக்குள் சில நாட்களாக ஏராளமான பிரச்சனைகள் நடைபெற்று வருகிறது அதிமுகவில் இருந்து பாஜவுக்கும் , பாஜகவில் இருந்து அதிமுகவுக்கும் இல்லையெனில் வேறு கட்சிகளுக்கு தொண்டர்கள் மேல் நிலை அரசியல் பிரமுகர்கள் என பலரும் கட்சி தாவி வருகின்றனர்.

அவ்வாறு வெளியில் செல்பவர்கள் இதுவரை இருந்து வந்த கட்சி குறித்து பல திடுக்கிடும் புகார்களை கூறி அரசியல் வட்டாரங்களை அதிர வைத்துவிடுகின்றனர் . அதிலும் குறிப்பாக தமிழக பாஜகவில் இருந்து வெளியில் செல்பவர்கள் போற போக்கில் பல பக்கங்கள் கொண்ட குற்றசாட்டுகளை முன்வைத்துவிட்டு செல்கின்றனர்.

அந்தவகையில் பாஜக பிரமுகரும் , நடிகருமான எஸ்.வி.சேகர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அண்ணாமலை குறித்து எஸ்.வி.சேகர் கூறியதாவது :

சூப்பர் ஸ்டார் ரஜினிய ஏமாத்திட்டு ஓடி வந்தவருதான் அண்ணாமலை அவருக்கலாம் கட்சி தலைவனாக இருக்க தகுதியே கிடையாது என்றும் இப்போ வந்தவருக்கு கட்சியில் இவ்ளோ இடமான்னு கர்நாடகா தலைவரே கோவிச்சுக்கற அளவுக்கு அண்ணாமலை நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் எடியூரப்பா மகனுக்கு அண்ணாமலை போய் சீட்டு கேட்டதுதான் கர்நாடகாவில் பாஜக தோத்ததுக்கு காரணம். பக்கத்து ஸ்டேட்டு பிஜேபிகாரன்லாம் நம்ம ஸ்டேட் பிஜேபியை பார்த்து சிரிக்கிறான் என்றார் .

“Save TamilnaduBJP from Annamalai-தான் இப்போ என்னோட வேண்டுகோள்” என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Total
0
Shares
Related Posts