டி20 உலக கோப்பை தொடரின் 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கெத்து காட்டியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள தனி தீவில் நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதியது.
இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
அணியின் தொடக்க வீரர்களாக கோலி மற்றும் ரோஹித் களமிறங்கினர் . இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி இந்த முறையும் 9 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்து சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் அரைசதம் கடந்து அசத்த அவருடன் அதிரடியாக விளையாடி வந்த சூரியகுமார் 47 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவிரவிட்டார்.
Also Read : மாணவர்களுக்கு வைர மோதிரம், 5000 மதிப்பிலான காசோலை வழங்கினார் விஜய்..!!
இதையடுத்து ரோஹித்தும் 57 ரன்களில் வெளியேற அடுத்து வந்த வீரர்கள் ஓரளவு நித்தமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 171 ரன்கள் எடுத்தது . இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.
ஆரம்பம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இங்கிலாந்து வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .
இதனால் 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 103 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை ஒப்புக்கொண்டது . இதன்மூலம் 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு கெத்தாக முன்னேறியுள்ளது.