SDPI Party Protest Against Modi : எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 21ம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில், பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பிரச்சாரத்தில் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகியது.
இதையும் படிங்க : விமானத்தில் ஏற்பட்ட கோளாறு.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. அடுத்து நடந்தது?
இதனால், பிரதமர் மோடி வெறுப்பு அரசியலில் ஈடுபடுவதாகவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது.

அதனைத் தொடர்ந்து, இன்று (27-04-24) சனிக்கிழமை பிரதமர் மோடி மத வெறுப்பை தூண்டும் வகையில் பேசியதாகவும்,
தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக பிரசாரம் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது சென்னை தேர்தல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பேரணியாக சென்றனர்.
அவர்களை காவல் துறையினர் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர் SDPI Party Protest Against Modi.