ஐ.நா.வுக்கான ஆப்கன் தூதராக முகமது சுகைல் சாகீன் பெயரை தாலிபான் அமைப்பின் கீழ் அமைந்துள்ள அரசு அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடர் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஐ.நா.பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஆப்கானிஸ்தானின் முந்தைய பிரதிநிதிக்குப் பதிலாக புதிய பிரதிநிதியை தாலிபான் அரசு அறிவித்துள்ளது.

இதற்காக கத்தார் நாட்டில் நடைபெற்ற அமைதிப் பேச்சின்போது தாலிபான்களின் செய்தித் தொடர்பாளராகப் பணியாற்றிய முகமது சுகைல் சாகீன் என்பவரின் பெயரை தாலிபான் அரசு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 15 அன்று ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் பட்டியலில் ஆப்கன் தூதர் குலாம் ஈசாக்சாய் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டுகோள் விடுத்து ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தாகி எழுதிய கடிதம் செப்டம்பர் 20ஆம் தேதி வந்துள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.