ITamilTv

அழகு என்பது வெளித்தோற்றம் மட்டுமல்ல.. – ஜப்பானின் விளம்பர தூதராக நடிகை தமன்னா..!

Spread the love

ஜப்பானின் ஷிசிடோ நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமான நடிகை தமன்னா, வியாபாரி, கல்லூரி, அயன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார்.

அதன்பிறகு சூர்யா, விஜய், தனுஷ், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருக்கிறார். இப்படி சினிமாவில் பிஸியாக நடித்து வரும் தமன்னா ஜப்பானின் ஷிசிடோ நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வருட தொடக்கத்தில் இந்தியாவில் தனது பொருட்களை அறிமுகம் செய்வதாக அறிவித்திருந்த ஷிசிடோ நிறுவனம், தற்போது அதன் விளம்பர தூதராக தமன்னாவை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள நடிகை தமன்னா.., “ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அழகு சாதன பொருட்களில் சிறந்து விளங்கும் ஷிசிடோ நிறுவனத்துடன் இணைவது மகிழ்ச்சி”.

“தரம், புதுமை, தனித்துவத்தை கொண்டாடுவதில் ஷிசிடோ கொண்டுள்ள அர்ப்பணிப்பு என்னுடன் தனிப்பட்ட அளவில் ஒத்துப் போகிறது”.

“அழகு என்பது வெளித்தோற்றம் மட்டுமல்ல, உங்களைக் குறித்து நீங்கள் நம்பிக்கையுடனும் அதிகாரத்துடனும் உணர்வது தான் என நான் நம்புகிறேன்” எனக் கூறியிருந்தார்.


Spread the love
Exit mobile version