ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்ற விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் தற்போது இப்படம் அங்கு மாபெரும் சாதனையை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவான திரைப்படமே மகாராஜா. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களின் பேராதரவை பெற்று மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது.
இந்நிலையில் இப்படம் சீனாவில் கடந்த ஆண்டு நவ.29-ம் தேதி வெளியானது அங்கேயும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இப்படம் சீனாவில் வசூல் ரீதியாகா அபார சாதனையை நிகழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : Ducati பிரியர்களே – 2025-ன் புதிய மாடல் பைக்குகளின் பட்டியலை வெளியிட்டது Ducati..!!
சீனாவில் 2018-ம் ஆண்டுக்குப் பிறகு அதிக வசூலை ஈட்டிய இந்தியப் படம் என்ற சாதனையை விஜய் சேதுபதியின் 50வது படமான ‘மகாராஜா’ திரைப்படம் படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த நவம்பர் வெளியான இப்படம் ₹91.55 கோடியை வசூலித்துள்ளது. ஆமீர்கானின் 3 இடியட்ஸ், தங்கல் ஆகிய படங்கள் அங்கு அதிகம் வசூலித்த இந்திய படங்களாக உள்ள உள்ள நிலையில் அந்த வரிசையில் தற்போது மகாராஜா திரைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.