தமிழக சட்டசபை(TN Assembly) கூட்டத்தொடர் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் கூட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.கடந்த மார்ச் மாதம் மானிய கோரிக்கை கூட்டம் தொடங்கி ஏப்ரல் 21 வரை சட்டமன்றம் நடைபெற்றது.
பரபரப்பான அரசியல் சூழலில் சட்டசபை கூடவுள்ளதால் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு,அரசு செலவினங்களுக்கு நிதி ஒப்புதல் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக விவாதங்களுக்கு சட்டசபை கூட்டுவது வழக்கம்.
அந்த வகையில் தமிழக சட்டசபை கூட்டுத்தொடர் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் கூடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைச் சட்டம், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, உள்ளிட்டவை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அடுத்த மாதம் மூன்றாம் தேதி நான்காம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட எஸ்பிக்கள் மாநாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது அதனை தொடர்ந்து கூட்டத்தொடரை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது..