தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அமைச்சரவையில் தமிழக அரசு மாற்றம் செய்ய ஆளுநரிடம் கேட்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்க உள்ளார்.
கோவி.செழியன், சேலம் ராஜேந்திரன், நாசர், செந்தில் பாலாஜி ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Also Read : நாமக்கல் கொள்ளை சம்பவம் : கொள்ளையர்களின் தலைவன் யார்? – நாமக்கல் எஸ்.பி.பேட்டி!!
மனோ.தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் .
இதுமட்டுமின்றி 6 அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது .
பொன்முடி – வனத்துறை.
தங்கம் தென்னரசு – நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை
மெய்யநாதன் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
மதிவேந்தன் – ஆதிதிராவிடர் நலத்துறை.
கயல்விழி – மனிதவள மேம்பாட்டு துறை
ராஜ கண்ணப்பன் – காதி மற்றும் பால்வளத்துறை
இன்று மாலை 3:30 மணிக்கு ( ஆளுநர் மாளிகை ) ராஜ்பவனில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
சுற்றுலாத் துறை அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமச்சந்திரன், அரசுக் கொறடாவாக நியமனம்.
அரசுக் கொறடாவாக இருந்த கோவி.செழியன் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.