எந்தவொரு புகையிலை தயாரிப்பும் மக்களுக்கு தீங்கு என கண்டறியப்பட்டால் அரசு தடை விதிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஹான்ஸ் பொருள் விற்பனை மீது நடவடிக்கையை எடுப்பதை எதிர்த்த ஏஆர் பச்சாவட் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நடைபெற்ற வழக்கில் ஹான்ஸில் 1.8% நிகோடின் உள்ளது; மக்களின் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.