ஏர் ஆம்புலன்ஸாக மாற்றம் பெருகிறது தமிழக அரசின் ஹெலிகாப்டர்

Tamil-Nadu-Government-s-helicopter-planned-to-be-used-as-an-air-ambulance
Tamil Nadu Government s helicopter planned to be used as an air ambulance

அரசுமுறைப் பயணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த தமிழக அரசின் ஹெலிகாப்டரை ஆம்புலன்ஸாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆகஸ்ட் 2005 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பெல் 412ep ரக ஹெலிகாப்டரொன்று தமிழக அரசிடம் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் முதல் இயக்கப்படாமல் உள்ள இந்த ஹெலிகாப்டர் சென்னை மீனம்பாக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசுமுறைப் பயணங்களுக்காக முதலமைச்சரால் பயன்படுத்தப்படும் இந்த ஹெலிகாப்டர், இதுவரை 2,449 மணி நேரம் பறந்துள்ளது.

Tamil-Nadu-Government-s-helicopter-planned-to-be-used-as-an-air-ambulance
Tamil Nadu Government s helicopter planned to be used as an air ambulance

14 பேர் பயணிக்கக்கூடிய வசதியுள்ள இந்த ஹெலிகாப்டரை, ஆம்புலன்ஸாக மாற்றி மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக சமீபத்தில் தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தி்ல் விவாதிக்கப்பட்டிருந்தது. அதன்முடிவில் இது தொடர்பாக அமைக்கப்பட்ட அரசு அதிகாரிகள் கொண்ட குழு, இந்த ஹெலிகாப்டரை ஏர் ஆம்புலன்ஸாக பயன்படுத்துவது தொடர்பாக திட்டமிட்டனர்.

Total
0
Shares
Related Posts