நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்று தொழிற்சாலைகள் குறித்த வருடாந்திர மதிப்பீட்டு 2022-23 ஆண்டு மத்திய அரசு அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் 15.66% தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஒட்டுமொத்த தொழிலாளர்களில் சுமார் 1.85 கோடி தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்க அமைச்சகம் ஆண்டுதோறும் ஆலைகள் பற்றி மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது வெளியிட்டுள்ள மதிப்பீட்டு அறிக்கையின் படி நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.