செந்தில் பாலாஜி தம்பி, நண்பர்கள் வீடுகளில் சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜி (Senthil Balaji )தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறையினர்  சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் செந்தில் பாலாஜி (Senthil Balaji )தொடர்புடையதாக கருதப்படும் அரசு ஒப்பந்ததாரர் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது

சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 100 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தமிழக அமைச்சர் வீட்டில் நடைபெறும் சோதனை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Total
0
Shares
Related Posts