தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,316 தேர்வு மையங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இன்று தொடங்கும் இந்த தேர்வு மார்ச் 25ம் தேதியோடு முடிவடைகின்றது.
பரீட்சை எழுதும் மாணவர்களின் வசதிக்கேற்ப அணைத்து தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : உத்தரகண்ட் பனிச்சரிவு – 2வது நாளாக தொடரும் மீட்பு பணி..!!
தேர்வு எழுத வரும் மாணவர்களை முழுமையாக சோதனை செய்து பிறகு உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றும் , ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் 242 மையங்களில் நடக்கும் பிளஸ் 2 தேர்வை 65,641 மாணவர்கள் எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.