தமிழக அரசு செலவு கணக்குகளை காட்டாமல் இருக்கும் வரையில் தமிழகத்திற்கு தம்பிடி காசு கூட மத்திய அரசு வழங்காது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் வேளாங்குளத்தில் செய்தியாளர்ளை சந்தித்த ஹெச்.ராஜா கூறியதாவது :
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது . கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 120 கொலைகள் நடந்துள்ளது. இதில் அரசியல் கட்சி நிர்வாகிகள் 8 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
Also Read : கேராளவிற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய தமிழக முதல்வர் ராஜினாமா செய்வதே சிறந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் என்கவுன்ட்டர் செய்ததன் மூலம் காவல்துறையினர் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும்.
சென்னையில் வெள்ள நீர் வடிகாலுக்கு மத்திய அரசு ஒதுக்கிய ரூ.500 கோடியை செலவு செய்த கணக்கினை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை. அதை வழங்காத வரை தமிழகத்திற்கு தம்படி காசு கூட மத்திய அரசு வழங்காது என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.