Site icon ITamilTv

நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய தனுஷ்..

Dhanush Karthi Nadigar SangamNassar

Dhanush Karthi Nadigar SangamNassar

Spread the love

தென் இந்திய நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளுக்காக நடிகர் தனுஷ் ஒரு கோடி ரூபாய் கொடுத்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள அபிபுல்லா சாலையில் ரூ.26 கோடி செலவில் 4 மாடி கட்டிடங்கள் கொண்ட நடிகர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தை கட்ட அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது.

நடிகர் சங்கம் கட்டிடம் 40 சதவீத கட்டிடப்பணிகள் முடிவடைந்தது. இன்னும் 40 கோடி ரூபாய் நீதித் தேவைப்படும் என்று நடிகர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்திற்கு பத்மபூசன் விருது – நெகிழ்ச்சியுடன் விருதை பெற்ற பிரேமலதா விஜயகாந்த்

இதனை தொடர்ந்து நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக முன்னணி தமிழ் நடிகர்கள் நிதியுதவிகள் செய்துவருகிறார்கள். உலக நாயகன் கமல்ஹாசன் , உதயநிதி ஸ்டாலின் , நடிகர் விஜய் , நடிகர் நெப்போலியன் உள்ளிட்டவர்கள் தலா ஒரு கோடி காசோலையை வழங்கியிருந்தார்கள்.

சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ 50 லட்சம் நிதி வழங்கிய நிலையில், தற்போது நடிகர் தனுஷ் தென் இந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ரூ ஒரு கோடி நிதி வழங்கியுள்ளார்.

தனுஷுக்கு நடிகர் சங்கத்தில் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்கள்.


Spread the love
Exit mobile version