தமிழ்நாடு அரசால் துவங்கப்பட்டுள்ள தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த ரூ.401 கோடி ஒதுக்கீடு செய்தும் ரூ.393 கோடி மாணவர் உதவித்தொகைக்கும், திட்டத்தை செயல்படுத்த ரூ.8 கோடியும் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை செயல்படுத்த மாநில அளவிலானக் குழு, மாநில அளவிலான மேற்பார்வையாளர் குழு அமைத்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
6 – 12ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசால் துவங்கப்பட்டுள்ள தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
6 – 12ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் பயன்பெறுவர் . வருமான உச்ச வரம்பு உட்பட எந்தப் பாகுபாடும் இல்லை
தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்; பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசு அங்கீகரித்ததாக இருத்தல் வேண்டும்
பிற மாநிலங்களில் IIT, NIT, IISER போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் பயன் பெறலாம்
தொலைதூரக்கல்வி மற்றும் அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஊக்கத்தொகைப் பெற இயலாது
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 8 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயின்று ஐடிஐ படிக்கும் மாணவர்களும் பயன்பெறலாம்
‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை செயல்படுத்த மாநில அளவிலான குழு, மாநில அளவிலான மேற்பார்வையாளர் குழு அமைத்து அரசாணை வெளியீடு
‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்திற்காக விண்ணப்பிக்க பிரத்யேக தகவல் முகமை (Portal) உருவாக்கம்
உயர்கல்வி பயிலும் கல்வி நிறுவனங்கள் மூலமாக, மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.