கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயர்ந்துள்ள நிலையில் நீலகிரியை சேர்ந்த ஒரு தமிழரும் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
குடும்ப சூழல் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு சென்று வேலை பார்த்து வந்தவர் தான் காளிதாஸ் என்ற இளைஞர் . வயநாட்டில் கட்டிட வேலை பார்த்து வந்துள்ள காளிதாஸ் இன்று வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார் . இந்நிலையில் அவர் வேலை பார்த்த பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயர்ந்துள்ள நிலையில் நீலகிரியை சேர்ந்த காளிதாஸும் இயற்கை ஏற்படுத்திய இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
Also Read : 19 வயது இளைஞரை 7 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கொடூர கும்பல்..!!
இந்நிலையில் காளிதாஸ் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :
நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா 2 கிராமம், மரப்பாலம், அட்டிக்கொல்லி பகுதியைச் சேர்ந்த திரு.காளிதாஸ் (வயது 34) த/பெ.காளி என்பவர் கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை சூரல்மலைக்கு சென்றிருந்தபோது இன்று (30.07.2024) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த திரு.காளிதாஸ் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த திரு. காளிதாஸ் அவர்களின் குடும்பத்திற்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.