”கேரள குண்டு வெடிப்புக்கு தேர்தல் சாயம் பூசாதீங்க” சட்டென்று கோபப்பட்ட தமிழிசை!!

தமிழ் நாட்டில் நடந்த ராஜ்பவன் குண்டு வெடிப்பு மற்றும் கேரள குண்டு வெடிப்பு குறித்தும் மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை(tamilisai soundararajan) குற்றசாட்டியுள்ளார்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டத்தில் நேற்று குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சுமார் 2000 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பயங்கர சத்தத்துடன் 3 குண்டுகள் வெடித்தது.இந்த குண்டு வெடிப்பில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுமி உயிரிழந்துள்ளார் . மேலும் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் 52 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், தெலுங்கானாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

கேரள குண்டு வெடிப்பில் பல உயிர்கள் பலியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவில் , சிறப்பு புலனாய்வு குழுவை கேரளாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் தமிழ் நாட்டில் நடந்த ராஜ்பவன் குண்டு வெடிப்பு மற்றும் கேரள குண்டு வெடிப்பு குறித்தும் மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை குற்றசாட்டியுள்ளார்.மேலும் மாநிலங்களில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து பின்புல காரணங்களை அறிந்தகொள்ள வேண்டும்.

மேலும் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .தொடர்ந்து பேசிய அவர்,வன்முறையாளர்கள் எங்கு இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்.வரும் 2023 தேர்தல் நடைபெறும் நிலையில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என்ற செய்தியாளர் கேள்விக்கு,மத்திய அரசை பொறுத்தவரை தீவிரவாதத்தை ஒழிக்க ஈடுபட்டு வருகிறது.இந்த சம்பவத்திற்கு யாரும் அரசியல் சாயத்தை பூச வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts