தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பழனிவேல் தியாகராஜனை இனிமேல் யார்கிட்டயும் பேச கூடாதுன்னு அதிமுக நிர்வாகி CTR நிர்மல்குமார் கிண்டல் செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் தொழில்நுட்ப துரை அமைச்சரராக TRB ராஜா ஆளுநர் உரையுடன் தமிழக முதல்வர் முகஸ்டலின் முன்னிலையில் இன்று பதவி ஏற்று கொண்டார்.
தற்போது வெளியான தகவலின்படி டி.ஆர்.பி.ராஜாவுக்கு தங்கம் தென்னரசு வகித்து வந்த தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ் வகித்து வந்த தொழில்நுட்பத்துறை நிதித்துறை அமைச்சராக இருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
அவர் கவனித்து வந்த நிதித்துறை மற்றும் மனித வளத்துறை தங்கம் தென்னரசுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் பால்வள துறை அமைச்சரராக இருந்த நாசர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தற்பொழுது அந்த துறையை மனோ தங்கராஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. பின்னர் ஆளுநருடன் அமைச்சர்கள் எடுத்துக்கொண்ட குழு படம் இணையத்தில் வைரலானது.
இது சிலரின் கவனத்தை ஈர்த்தது.மேலும் இது குறித்து அதிமுக நிர்வாகி நிர்மல்குமார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை கிண்டல் செய்து ட்விட் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில்,இனிமேல் யார்கிட்டயும் பேச கூடாதுன்னு ஒரேடியா mask வாயில் வச்சு தைத்துவிட்டார் போல…என்று தெரிவித்துள்ளார்.