ITamilTv

திமுக – அதிமுக இடையே நேரடி மோதல்.. எந்தெந்த தொகுதி தெரியுமா?

திமுக - அதிமுக

Spread the love

மக்களவை தேர்தல் 2024 இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் (40) ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று (20ம் தேதி) நடைபெற்றது. அதனை முன்னிட்டு திமுக, அதிமுக ,பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் வேட்பாளர் அறிவிப்பு மற்றும் தொகுதி அறிவிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது.

அந்த வகையில் தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் மீதியுள்ள 19 தொகுதிகளில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்துகின்றன.

அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 33 தொகுதிகளில் அதிமுக தங்கள் கட்சி வேட்பாளர்களை களம் இறக்கவுள்ளது.

திமுக 21 தொகுதிகளிலும், அதிமுக 33 தொகுதிகளில் போட்டியிட்டாலும், இந்த 2 கட்சிகளும் 18 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது.

திமுக - அதிமுக

Also Read : தமிழகத்தில் காலை 7 முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு – வெளியான முக்கிய அறிவிப்பு..!!

திமுக நேரடியாக போட்டியிடும் தொகுதிகள்:

வடசென்னை, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி (தனி) கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி திமுக, போட்டியிடுகிறது.

மத்திய சென்னை, தஞ்சாவூர் ,தென்காசி (தனி) – புதிய தமிழகம் கட்சி மற்றும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர்களுக்கு எதிராக நேரடியாக போட்டியிடுகிறது.

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

1‌ ) வடசென்னை – கலாநிதி வீராசாமி

2 ) தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்

3 ) மத்திய சென்னை – தயாநிதி மாறன்

4 ) காஞ்சிபுரம் (தனி) – செல்வம்

5 ) அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்

6) வேலூர் – கதிர் ஆனந்த்

7 ) தருமபுரி – அ.மணி

8 ) திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை

9 ) சேலம் – செல்வ கணபதி

10 ) கள்ளக்குறிச்சி – மலையரசன்

11 ) நீலகிரி (தனி) – ஆ.ராசா

12 ) பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி

13 ) கோவை – கணபதி ராஜ்குமார்

14 ) தஞ்சாவூர் – ச.முரசொலி

15 ) தூத்துக்குடி – கனிமொழி கருணாநிதி

16 ) தென்காசி (தனி) – ராணி ஸ்ரீ குமார்

17 ) ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு

18 ) பெரம்பலூர் – அருண் நேரு

19 ) தேனி – தங்க தமிழ்செல்வன்

20 ) ஈரோடு – பிரகாஷ்

21 ) ஆரணி – தரணி வேந்தன்

AlsoRead : அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி..!!

அ திமுக நேரடியாக போட்டியிடும் தொகுதிகள்:

அதிமுக போட்டியிடும் 33 தொகுதிகளில் திமுகவோடு நேரடியாக மோதும் 18 தொகுதிகள் தவிர, அதன் கூட்டணி கட்சிகளை எதிர்த்து 15 இடங்களில் போட்டியி டுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் அதிமுக போட்டியிடுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக நாகப்பட்டினம், திருப்பூர் ஆகிய இடங்களிலும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக மதுரையிலும், விசிகவுக்கு எதிராக விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி) ஆகிய தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள்.

மதிமுகவுக்கு எதிராக திருச்சியிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு எதிராக ராமநாதபுரத்திலும், கொமதேகவுக்கு எதிராக நாமக்கல் தொகுதியிலும் அதிமுக போட்டியிடுகிறது.

சில தொகுதிகளில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே களத்தில் இல்லாமல் அதன் கூட்டணி கட்சிகள் மோதிக் கொள்கின்றன. குறிப்பாக திருவள்ளூர் (தனி), கடலூர், விருதுநகர் ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், தேமுதிகவும் மோதிக் கொள்கின்றன. அதேபோல் திண்டுக்கல் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், எஸ்.டி.பி.ஐ. கட்சியும் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு:

ஶ்ரீ பெரும்புதூர் – பிரேம்குமார்

வேலூர் – எஸ்.பசுபதி

தருமபுரி – அசோகன்

திருவண்ணாமலை – கலியபெருமாள்

கள்ளக்குறிச்சி – குமரகுரு

திருப்பூர் – பி.அருணாச்சலம்

நீலகிரி – லோகேஷ் தமிழ்செல்வன்

கோவை – சிங்கை ராமச்சந்திரன்

பொள்ளாச்சி – கார்த்திக் அப்புசாமி

திருச்சி – கருப்பையா

பெரம்பலூர் – சந்திரமோகன்

மயிலாடுதுறை – பி.பாபு

சிவகங்கை – சேவியர்தாஸ்

தூத்துக்குடி – ஆர்.சிவசாமி வேலுமணி

திருநெல்வேலி – சிம்லா முத்துச்செல்வன்

கன்னியாகுமரி – பசுலியான் நசரேத்

புதுச்சேரி – தமிழ்வேந்தன்

விளவங்கோடு (இடைத்தேர்தல்) – யு.ராணி


Spread the love
Exit mobile version