தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதியில் 60 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசுவதால் ராமேசுவரம் மீனவா்கள் நவ.29 ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தென்கடலோரப் பகுதியில் 50 முதல் 60 கிலோ மீட்டா் வேகத்தில் காற்று வீசிவருகிறது. இதனால் கடல் பகுதியில் அலையின் சீற்றம் அதிகளவில் உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் மீனவகள் நவ. 29 ஆம் தேதி வரை மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா்.
இதனால் இப்பகுதிகளில் உள்ள 1,700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. சுமாா் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.